
விராட் கோலியை கூர்ந்து கவனித்து தனது திறமைகளை வளர்த்துக் கொள்வதாக இந்திய அணியின் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக அணியில் சர்ஃபராஸ் கான் மற்றும் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றாலும், பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், விராட் கோலியை கூர்ந்து கவனித்து தனது திறமைகளை வளர்த்துக் கொள்வதாக இந்திய அணியின் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வலைப்பயிற்சியின்போது விராட் கோலி பேட் செய்வதை எப்போதும் கூர்ந்து கவனிப்பேன். குறிப்பாக, அவர் எவ்வாறு கால்களை நகர்த்தி பந்துகளை எதிர்கொள்கிறார் என்பதை கவனிப்பேன். அவரிடமிருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்களை நான் பேட்டிங் செய்யும்போது செயல்படுத்த முயற்சிப்பேன். அவரைப் போன்று பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது கிடையாது. இருப்பினும், அவரைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.