அணியில் இடம்பெற இஷான் கிஷன் இதனை செய்ய வேண்டும்: ராகுல் டிராவிட்

இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பிறகு அவரை இந்திய அணியில் சேர்த்துக் கொள்வது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்
அணியில் இடம்பெற இஷான் கிஷன் இதனை செய்ய வேண்டும்: ராகுல் டிராவிட்

இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பிறகு அவரை இந்திய அணியில் சேர்த்துக் கொள்வது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் அங்கம் வகித்து வந்த இஷான் கிஷன் கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க தொடரின்போது அவர் விடுப்புக் கோரியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய இஷான் கிஷன், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையிலும் விளையாடவில்லை.

இந்த நிலையில், இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பிறகு அவரை இந்திய அணியில் சேர்த்துக் கொள்வது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துடனான வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட் இதனை தெரிவித்தார். 

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு அனைவருக்கும் வழி இருக்கிறது. இஷான் கிஷன் தொடர்பாக நான் அதிகம் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. இஷான் கிஷன் விஷயத்தில் நான் போதுமான அளவுக்கு விளக்கமளித்து விட்டேன். அவர் எங்களிடம் சிறிது ஓய்வு வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தார். அவருக்கு நாங்கள் மகிழ்ச்சியாக விடுப்பினை வழங்கினோம். அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூற மாட்டேன். அவர் எப்போது விளையாடத் தயாராக இருக்கிறாரோ அப்போது சிறிது கிரிக்கெட் விளையாடிய பிறகு அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்வோம். அணிக்கு திரும்பும் விருப்பம் அவரிடமே உள்ளது. நாங்கள் அவரை எதையும் செய்ய வேண்டும் எனக் கூறி வற்புறுத்தவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com