விசுவாசம் என்பது மரியாதையுடன் தொடர்புடையது: தலைமைப் பண்பு குறித்து தோனி விளக்கம்! 

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமைப் பண்பு குறித்து பேசியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

முன்னாள் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2020ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசியின் முக்கியமான 3 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். அவரது சாதனைகளை இதுவரை எந்த இந்திய கேப்டனும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமைப் பண்பு குறித்து பேசியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு எம்.எஸ்.தோனி பேசியதாவது: 

விசுவாசம் என்பது மரியாதையுடன் அதிகம் தொடர்புடையது. டிரஸ்ஸிங் ரூம் (ஓய்வறை) பற்றி நீங்கள் பேசும்போது, ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால், அந்த விசுவாசத்தைப் பெறுவது கடினம். இது அடிப்படையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் இருக்கிறது என்ன பேசுகிறீர்கள் என்பதில் இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் ஆனால் உங்களது நடத்தையே மரியாதையைப் பெற்றுத்தரும். 

தலைமைப் பண்பில் எனக்கு எப்போதுமே மரியாதையைப் பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. இது நீங்கள் ஒரு பதவியில் இருப்பதால் அல்லது உயர்ந்த இடத்தில் இருப்பதால் வருவதில்லை. அது உங்களது நடத்தையின் மூலமாக கிடைப்பது. சில நேரங்களில் மனிதர்கள் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் இருப்பார்கள். சில நேரங்களில் உங்களைத் தவிர ஒட்டுமொத்த அணியும் உங்களையும் நம்பும். 

மொத்தமாக கூறினால் மரியாதையை அதிகாரமாக வாங்கமுடியாது ஆனால் இயல்பாக சம்பாதிக்க முடியும். ஒருமுறை நீங்கள் விசுவாசத்தை பெற்றுவிட்டால் அதற்கான வீரர்களின் பலன்களும் உங்களைப் பின்தொடரும்” எனக் கூறினார். 

இந்திய அணிக்கு அனைத்து ஐசிசி கோப்பைகளையும் தோனி பெற்றுத் தந்துள்ளார். மேலும் ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை பெற்றுத் தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின்போது பல இளம் வீரர்கள் இவரிடம் கேள்வி கேட்பது நடகும். இவரது கேப்டன்சி (தலைமைப் பண்பு) கிரிக்கெட் உலகில் பலருக்கும் உத்வேகமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com