இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விவகாரத்தை திரும்பிப் பார்த்தால், அதனை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால், அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினால் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அந்த முடிவில் எனக்கு மகிழ்ச்சிதான். ஐபிஎல் போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எனக்கு தோன்றுகிற விஷயம் என்னவென்றால், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பு என்பது வெறும் பேட்ஜ்களை அணிந்து கொள்வது மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை அணியில் நான் என்னவாக இருந்தாலும் என்னுள் தலைமைப் பண்பு உள்ளது. அதற்கு நமது பெயருக்குப் பின்னால் கேப்டன் அல்லது துணைக் கேப்டன் பதவியின் பெயர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.