மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான உஸ்மான் கவாஜா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான உஸ்மான் கவாஜாவுக்கு அடிபட்டது. மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் வீசிய பந்தை எதிர்கொண்டபோது பந்து கவாஜாவின் தாடையில் பட்டது. இதில், அவருக்கும் சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டது.
இதையும் படிக்க: இந்திய டெஸ்ட் தொடர்: ஹாரி ப்ரூக்குக்கு மாற்று வீரர் இவர்தான்!
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் உஸ்மான் கவாஜா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: உஸ்மான் கவாஜாவுக்கு முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்தன. அவருக்கு தாமதமாக ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை கவனித்து வருகிறோம். பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக நாளை அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
இதையும் படிக்க: கடைசி டி20: நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கவாஜா விளையாடத் தயாராக இருக்கும்பட்சத்தில், முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே 11 பேர் கொண்ட அணியே இரண்டாவது டெஸ்ட்டிலும் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



