
2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஒருநாள் அணியை ஐசிசி இன்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணிக்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர்த்து மேலும் 5 இந்திய வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். ஷுப்மன் கில், விராட் கோலி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2023 ஆண்டின் ஐசிசி ஒருநாள் அணி விவரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் க்ளாசன், மார்கோ ஜேன்சன், ஆடம் ஸாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி.
Eight players that featured in the #CWC23 Final have made the cut for the ICC Men's ODI Team of the Year in 2023
â ICC (@ICC) January 23, 2024
Details https://t.co/AeDisari9B
கடந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய 8 வீரர்கள் 2023 ஆண்டின் ஐசிசி ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







