குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இங்கிலாந்து ஸ்பின்னர்களை திணறடித்த ஜெய்ஸ்வால்: அக்‌ஷர் படேல் புகழாரம்

இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ஸ்வால் திணறடித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அக்‌ஷர் படேல் ஜெய்ஸ்வாலுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 7:52 pm IST

இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ஸ்வால் திணறடித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அக்‌ஷர் படேல் ஜெய்ஸ்வாலுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119  ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். 

இந்த நிலையில், இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ஸ்வால் திணறடித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அக்‌ஷர் படேல் ஜெய்ஸ்வாலுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவர் முதல் ஓவரிலிருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் திணறடித்தார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களை ஜெய்ஸ்வால் ஆட்டத்தின்மீது கட்டுப்பாட்டை எடுக்கவிடவில்லை. அதிரடியாக விளையாடி அவர்களது பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார்  என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.