
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கும், இந்திய அணி 436 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படிக்க: பென் ஸ்டோக்ஸை 12வது முறையாக விக்கெட் எடுத்த அஸ்வின்!
இந்த நிலையில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ஆலி போப் அதிகபட்சமாக 148 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். ஆலி போப் 148 ரன்களுடனும், ரீகன் அகமது 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.