லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

ரஞ்சி கோப்பையில் தனியொருவனாக 366 ரன்கள்: 26 சிக்ஸர்கள், 34 பவுண்டரிகள்!

ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக 366 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் தன்மய் அகர்வால். 

படம்: எக்ஸ் | பிசிசிஐ டொமஸ்டிக்

Published On :7 பிப்ரவரி 2024, 8:43 pm IST

முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரியின் சாதனையை முறியடித்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த தன்மய் அகர்வால். 28 வயதான இவர் ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். 

அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் முதல் இன்னிங்ஸில் 615/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில் ஹைதராபாத்தின் தொடக்க வீரர் தன்மய் அகர்வால் 181 பந்துகளில் 366 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 26 சிக்ஸர்கள், 34 பவுண்டரிகள் அடங்கும். 

அருணாச்சல பிரதேசம் 27 ஓவர்களில் 129/1 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

முதல்தர ஒருநாள் போட்டியில் அதிவேகமாக (147 பந்துகளில்) 300 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் தன்மய் அகர்வால். இதற்கு முன்னதாக ரவி சாஸ்திரி 119 பந்துகளில் அதிவேகமாக 200 ரன்கள் அடித்துள்ளார். 39 வருடங்களாக இருந்த ரவி சாஸ்திர்யின் இந்த சாதனையை முறியடித்துள்ளார் தன்மய் அகர்வால். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.