இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாகவும், முதல் டெஸ்ட் பல விஷயங்களை யோசிப்பதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பளித்திருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஓவர்களை இங்கிலாந்து அணியின் ஆலி போப் சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாகவும், முதல் டெஸ்ட் பல விஷயங்களை யோசிப்பதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பளித்திருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு எந்த மாதிரியான ஆடுகளத்தை இந்தியா தேர்வு செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. எந்த மாதிரியான ஆடுகளத்தையும் உருவாக்கும் திறன் இந்திய அணிக்கு உள்ளது. அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தை கொண்டு வந்தாலும் அவர்களுக்கு யோசிப்பதற்கு சில விஷயங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறப் போகிறது என்பது உறுதியான முடிவு இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









