மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ளார்.

News image

சிஃப்ட் கௌர் சர்மா

படம்: எக்ஸ் / என்ஆர்ஏஐ

Updated On :5 ஏப்ரல் 2025, 7:11 am

DIN

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பையில் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா 50மீ. 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

23 வயதாகும் சிஃப்ட் கௌர் சர்மா தனது முதல் தங்கத்தை வென்றுள்ளார்.

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

3 பொசிஷன்களிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் 458.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா.

2ஆவது, 3ஆவது இடங்கள் முறையே ஜெர்மனி, கஜகஸ்தானைச் சேர்ந்த வீராங்கனைகள் அனிதா மன்கோல்ட், அரினா அல்டுகோவா பெற்றார்கள்.

கஜகஸ்தானைச் சேர்ந்த அரினா அல்டுகோவா ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆண்கள் பிரிவில் 50 மீ. துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சைன் சிங் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.