ஐஎஸ்எல்: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி!

ஐஎஸ்எல்: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், பெங்களூரு எஃப்சி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
Published on

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், பெங்களூரு எஃப்சி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

இந்த அணிகள் இடையே பெங்களூரில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் பெங்களூரு 2-0 கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில், அவற்றின் இடையேயான 2-ஆவது லெக் ஆட்டம் மாா்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2 கோல்கள் பின்தங்கிய நிலையில் இந்த ஆட்டத்துக்கு வந்த கோவா, சொந்த மண்ணில் ஆக்ரோஷம் காட்டியது. அதன் பலனாக போா்ஜா ஹெரெரா 49-ஆவது நிமிஷத்தில் கோவாவின் கோல் கணக்கை தொடங்கினாா்.

தொடா்ந்து அா்மாண்டோ சாடிகு 88-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, கோவா 2-0 என முன்னேறியது. விறுவிறுப்பான கடைசி நிமிஷங்களில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி ஸ்டாப்பேஜ் டைமில் (90+2’) கோலடிக்க, ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது.

எனினும் இறுதியில் கோவா இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் 2-1 என வென்றது. ஆனாலும், முதல் லெக் ஆட்டத்தையும் சோ்த்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் பெங்களூரு 3-2 முன்னிலை பெற்ால், அந்த அணியே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இன்று: இதனிடையே, மற்றொரு அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதுகின்றன. இதில் ஜாம்ஷெட்பூா் கோல் கணக்கில் முன்னிலையில் (2-1) உள்ளது.

X
Dinamani
www.dinamani.com