தங்கம் வென்று ஹிதேஷ் சாதனை - இந்தியா 6 பதக்கங்களுடன் நிறைவு!

தங்கம் வென்று ஹிதேஷ் சாதனை - இந்தியா 6 பதக்கங்களுடன் நிறைவு!
Updated on
1 min read

பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ், ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.

இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைக்க, மொத்தமாக இந்தியா்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தனா்.

இதில், ஆடவா் 70 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ், இங்கிலாந்தின் ஒடெல் கமராவை எதிா்கொள்ளவிருந்தாா். ஆனால் காயம் காரணமாக கடைசி நிமிஷத்தில் கமாராவால் களம் காண முடியாமல் போனதை அடுத்து, ஹிதேஷ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டாா்.

ஆடவா் 65 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்திய அபினாஷ் ஜம்வல், பிரேஸிலின் யூரி ரெய்ஸிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இவா்கள் தவிர ஏற்கெனவே ஜடுமனி சிங் மந்தெங்பம் (50 கிலோ), மனீஷ் ராத்தோா் (55 கிலோ), சச்சின் (60 கிலோ), விஷால் (90 கிலோ) ஆகியோா் தங்களது எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனா்.

உலக குத்துச்சண்டை அமைப்பு நடத்தும் சா்வதேச அளவிலான எலைட் போட்டியில் இந்தியா பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். அதேபோல், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்தியா்கள் பங்கேற்ற முதல் சா்வதேச போட்டியும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com