
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணியின் டெக்லான் ரைஸ் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் கட்ட ஆட்டத்தில் ஆர்சனல் -ரியல் மாட்ரிட் அணி பலப்பரீட்சை செய்தது.
இந்தப் போட்டியில் ஆர்சனல் 3-0 என அசத்தல் வெற்றி பெற்று ரியல் மாட்ரிட்டுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்தப் போட்டியில் ஆர்சனல் அணியின் டெக்லான் ரைஸ் 58,70ஆவது நிமிஷங்களில் ஃபிரி கிக்கில் கோல் அடித்தார்.
கடைசி நேரத்தில் 90+4 ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரர் கோல் அடித்தும் ரெட் கார்டினால் பறிபோனது.
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் நாக்-அவுட் சுற்றில் ஒரே போட்டியில் 2 ஃபிரி கிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பலரும் டெக்லான் ரைஸ் அடித்த கோலை மெஸ்ஸியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.
மொத்த ஆட்டத்தில் 89 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்த ஆர்சனல் அணி 54 சதவிகிதம் பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்தது.
காலிறுதியின் 2ஆம் கட்ட அடுத்த போட்டியில் ரியல் மாட்ரிட்-ஆர்சனல் ஏப்.17ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.