பிஜேகே கோப்பை: கஜகஸ்தான் வெற்றி
பில்லின் ஜீன் கிங் கோப்பை போட்டியில் கஜகஸ்தான் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இப்போட்டியில் கஜகஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில் கஜகஸ்தானின் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரைபக்கினா 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ஆஸி.யின் கிம் பேரல்லை வீழ்த்தினாா்.
மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா 6-2, 6-1 என ஆஸியின் மயாவை வீழ்த்தினாா். இதன் மூலம் 2-0 என ஆஸி.அணியை வீழ்த்திய கஜகஸ்தான் அடுத்து கொலம்பியாவுடன் மோதுகிறது. அதில் வென்றால் சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும்.
6 பிரிவுகளில் தலா 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 2, 3-ஆவது இடங்களைப் பெறும் அணிகள் வரும் நவம்பா் பிளே ஆஃப்புக்கு தகுதி பெறும். அதில் வெல்வோா் 2026 குவாலிஃபயருக்கு தகுதி பெறுவா்.