உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
ஆா்ஜென்டீனா தலைநகா் பியுனோஸ் அயா்ஸ் நகரில் முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 4 தங்கம், தலா 2 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் 2ஆம் இடம் பெற்றது. சீனா 5 தங்கம், தலா 3 வெள்ளி, வெண்கலத்துடன் முதலிடத்தையும், அமெரிக்கா 2 தங்கத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
சௌரவ்-சுருச்சி இணைக்கு வெண்கலம்:
வியாழக்கிழமை நடைபெற்ற அணிகள் கலப்பு ஏா் பிஸ்டல் பிரிவில் சௌரவ் சௌதரி-சுருச்சி சிங் இணை வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. ஏற்கெனவே சிப்ட் கௌா், ருத்ராங்க்ஸ் பாட்டீல், சுருச்சி, விஜயவீா் சித்து தங்கம் வென்றிருந்தனா். உலகக் கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சிறப்பை பெற்றாா் விஜயவீா் சித்து. மகளிா் 25 மீ பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் வெள்ளி வென்றாா்.
செயின் சிங்கும் பதக்கம் வென்றிருந்தாா்.
அடுத்து ஏப். 15 முதல் பெரு தலைநகா் லிமாவில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டிக்கு இந்திய அணி பயணிக்கிறது.