
லா லீகா கால்பந்து தொடரில் லெகானெஸ் அணியுடனான போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என வெற்றி பெற்றது.
இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடிய இந்தப் போட்டியில் 67 சதவிகித பந்தினை பார்சிலோனா அணி வீரர்களே தக்கவைத்தார்கள்.
48ஆவது நிமிஷத்தில் ரபீனியா அடித்த பந்தினை தடுப்பதற்கு பதிலாக எதிரணி வீரர் ஜார்ஜ் சயின்ஜ் ஓன் கோல் அடித்தார்.
87 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்த பார்சிலோனா அணி இறுதியில் 1-0 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும், இந்தாண்டில் தோல்வியே சந்திக்காத அணியாக வெற்றி நடைபோடுகிறது.
மொத்தம் 38 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் பார்சிலோனா அணி 31 போட்டிகளில் 70 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.
ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
கடந்த சீசனில் 95 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் கடைசியாக சில போட்டிகளில் சறுக்கலில் ஈடுபட்டு வருகிறது.
லா லீகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 31 போட்டிகள் - 70 புள்ளிகள்
2. ரியல் மாட்ரிட் - 30 போட்டிகள் - 63 புள்ளிகள்
3. அத்லெடிகோ மாட்ரிட் - 30 போட்டிகள் - 60 புள்ளிகள்
4. அத்லெடிகோ கிளப் - 30 போட்டிகள் - 54 புள்ளிகள்
5. வில்லாரியல் - 29 போட்டிகள் - 48 புள்ளிகள்
6. ரியல் பெட்டிஸ் - 30 போட்டிகள் - 48 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.