டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி..! தோனியுடன் விளையாடுகிறாரா?

கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியா வருவது குறித்து...
Inter Miami's Lionel Messi warms up with teammates before an MLS soccer match
லியோனல் மெஸ்ஸி. படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கால்பந்து உலகில் 8 முறை தங்கப் பந்து (பேலந்தோர்) வென்ற ஒரே வீரராக மெஸ்ஸி இருக்கிறார்.

மும்பையின் வான்கடே திடலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வரும் டிச.11ஆம் தேதி மெஸ்ஸி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் 7 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் மெஸ்ஸி இணைந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்கெல்லாம் மெஸ்ஸி வருவார்?

மும்பையை தவிர்த்து கொல்கத்தா, தில்லிக்கும் மெஸ்ஸி வரவிருக்கிறார். டிச.13 முதல் 15ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி கலந்துகொள்ளவிருக்கிறார்.

கொல்கத்தாவில் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த நிகழ்வில் மமதா பானர்ஜி கலந்துகொள்கிறார். இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்.

சமீபத்தில் மெஸ்ஸியின் கையெழுத்துப் பெற்ற ஜெர்ஸியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

2-ஆவது முறையாக இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி

இந்தாண்டின் தொடக்கத்தில் கேரள அமைச்சர் மெஸ்ஸி அக்டோபர் அல்லது நவம்பரில் திருவனந்தபுரம் வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

நட்புறவான போட்டி ஒன்றில் மெஸ்ஸி பங்கேற்க இருந்தது. பின்னர், இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக மெஸ்ஸி 2011-இல் கொல்கத்தா வந்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.

மெஸ்ஸியின் சாதனைகள்

38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள், 45 கோப்பைகளை வென்றுள்ளார்.

கடந்த 2022-இல் உலகக் கோப்பை வென்ற அவர் ஓராண்டில் 91 கோல்கள் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Summary

ndian football fans are in for a treat as legendary Argentine star Lionel Messi is set to visit Mumbai’s iconic Wankhede Stadium on December 14.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com