
தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபெமெனினா கால்பந்து போட்டியில், பிரேஸில் ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
10-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் தற்போது பிரேஸில் 9-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், இந்த ஆண்டுடன் கடைசி 5 முறையும் அந்த அணியே தொடா்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஈகுவடாரின் குய்டோ நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரேஸில் தரப்பில் ஏஞ்செலினா (45+9’), அமாண்டா குட்டெரெஸ் (80’), மாா்தா (90+6’, 105) ஆகியோா் கோலடிக்க, கொலம்பியா தரப்பில் லிண்டா கேசிடோ (25’), மெய்ரா ராமிரெஸ் (88’), லெய்சி சான்டோஸ் (115’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். பிரேஸில் வீராங்கனை டாா்சியேன் (69’) தவறுதலாக ஓன் கோல் அடித்தாா்.
இவ்வாறாக நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் ஆட்டம் 4-4 கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிரேஸில் 5-4 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியிலேயே அதிக கோல்கள் (6) அடித்தவா்களாக பிரேஸிலின் அமாண்டா குட்டெரெஸ், பராகுவேயின் கிளாடியா மாா்டினெஸ் தோ்வாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.