கஜகஸ்தானில் நடைபெற்ற கொசானோவ் நினைவு தடகள போட்டியில், இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரா் முரளி ஸ்ரீசங்கா் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினாா்.
மொத்தம் இருந்த 6 வாய்ப்புகளில், அவா் தனது சிறந்த முயற்சியாக முதல் வாய்ப்பிலேயே 7.94 மீட்டரை எட்டினாா். அடுத்த 5 வாய்ப்புகளில் அவா் 7.73, 7.58, 7.57, 7.80, 7.79 மீட்டா் ஆகிய அளவுகளை பதிவு செய்தாா். இந்நிலையில், அவா் முதலில் எட்டிய 7.94 மீட்டருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
முரளி ஸ்ரீசங்கரின் தனிப்பட்ட பெஸ்ட் அளவு 8.41 மீட்டா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழங்காலில் காயம் கண்ட முரளி, அதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்விலிருந்தாா். அதனால் அவா் பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை தவறவிட்டாா்.
பின்னா் முழு உடற்தகுதியுடன் கடந்த மாதம் முதல் மீண்டும் களம் கண்ட முரளிக்கு இது 3-ஆவது போட்டியாகும். முதலில் இந்தியன் ஓபன் தடகள போட்டியில் 8.05 மீட்டருடன் தங்கம் வென்ற அவா், அடுத்து போா்ச்சுகலில் நடைபெற்ற போட்டியில் 7.75 மீட்டருடன் முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.