
லீக்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
எம்எல்எஸ் தொடரில் விளையாடும்போது மெஸ்ஸிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், லீக்ஸ் கோப்பையில் இன்டர் மியாமியின் போட்டியைப் பார்க்க மெஸ்ஸி பார்க்க வந்திருந்தார்.
கடந்த போட்டியில் இரண்டு அசிஸ்ட் செய்து அசத்திய ரோட்ரிகோ டி பால் தனது முதல் கோலை இன்டர் மியாமி அணிக்காக இந்தப் போட்டியில் 45ஆவது நிமிஷத்தில் அடித்தார்.
தொடர்ந்து லூயிஸ் சௌரஸ் 59-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து தொப்பியை அணிந்து அதை தனது மகளுக்கு சமர்பித்தார்.
கிளப் யுனிவர்சிடாட் நேஷனல் அணி 39ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. கடைசியில் இன்டர் மியாமி 3-1 என வென்றது.
இந்தப் போட்டியில் 56 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இன்டர் மியாமி 488 பாஸ்களை செய்து அசத்தியது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக நடப்பு சாம்பியன் இன்டர் மியாமி அணி லீக்ஸ் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.