
கனடியன் ஓபனில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில் அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் டென்மாா்க்கின் கிளாரா டௌசனும் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் ஒசாகா 6-2, 7-6 (9-7) என நேர்செட்களில் வென்றார்.
கனடியன் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஒசாகா பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனையுடன் மோதல்!
அமெரிக்காவில் பிறந்த கனடாவில் வசிக்கும் 18 வயதான விக்டோரியோ போகோவுடன் 27 வயதான நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில் மோதுகிறார்.
இது குறித்து ஒசாகா, “போகோ விளையாடுவதை இன்று பார்த்தேன். எங்களுக்கு முன்னிலையில்தான் அவர்களது போட்டி நடைபெற்றது.
போட்டியில் அழுத்தமே இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. மேட்ச் பாயின்டிலிருந்து போகோ திரும்ப வந்தது இந்த வயதில் மெச்சத்தக்கதாக இருந்தது” என்றார்.
2021-க்குப் பிறகு டூர் அளவில் தனது முதல் பட்டத்தை வெல்ல ஒசாகா முனைப்புடன் இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.