
நட்பு ரீதியான போட்டியில் ரியல் பெடிஸ், கோமா 1907 கால்பந்து அணி வீரர்கள் மோதிக்கொண்டது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
ஸ்பெயினில் நேற்று நடந்த போட்டியில் ரியல் பெடிஸ், கோமா கால்பந்து அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் மாற்றி மாற்றி பௌல்களை செய்து வந்தார்கள். இது 45-ஆவது நிமிஷத்தில் சண்டையாக மாறியது.
இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டார்கள்.
முதல்பாதிக்கு சில நிமிஷங்களுக்கு முன்பு நடந்த இந்தப் போட்டியில் அதுவரை கோமா அணி 2-0 (4’, 36’) என முன்னிலை வகித்தது.
பின்னர், மீண்டெழுந்த ரியல் பெடிஸ் 55,62-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து சமன்படுத்தியது.
இறுதியில் ஸ்டாபேஜ் டைம் கடைசி நிமிடத்தில் (90’+2) கோமா அணியின் அஜோன் கோல் அடித்து அசத்தினார். 3-2 என ரியல் பெடிஸை கோமா வீழ்த்தியது.
நட்பு ரீதியான போட்டியில் இப்படியா? எதிரிகளை பழிவாங்குவது போல் அடித்துக்கொள்வது என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.