
அமெரிக்காவின் பிரபல கால் பந்து தொடரான எம்எல்எஸ் தொடரில் தென் கொரிய வீரர் சன் லாஸ் ஏஞ்சலீஸ் அணியில் இணைந்தார்.
தென்கொரியாவைச் சேர்ந்த சன் (33 வயது) தன்னுடைய 23ஆவது வயதில் வடக்கு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். பத்தாண்டுகள் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். இதில், 454 போட்டிகளில் 173 கோல்கள் அடித்துள்ளார்.
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி சமீபத்தில் கைப்பற்றியது. 40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும்.
தற்போது, அமெரிக்காவில் எம்எல்எஸ் தொடரில் லாஸ் ஏஞ்சலீஸ் அணியில் இணைந்துள்ளார்.
20 மில்லியன் டாலர் கொடுத்து லாஸ் ஏஞ்சலீஸ் அணி இவரை 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
எம்எல்எஸ் வரலாற்றில் அதிகமாக மெஸ்ஸி 20.4 மில்லியன் டாலர் ஊதியம் பெருகிறார். தற்போது, சன் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் கிட்டதட்ட அவருக்கு நிகராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இது பற்றி சன் பேசியதாவது:
நான் மீண்டும் லாஸ் ஏஞ்சலீஸ் வருவேன் என நினைக்கவில்லை. ஆனால், தற்போது இங்கிருக்கிறேன். என்ன சொல்லுவது? கனவு நனவானது மாதிரி இருக்கிறது.
நான் வெற்றிபெற வந்திருக்கிறேன். உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒன்றை நான் காண்பிப்பேன். நாம் நிச்சயமாக வெல்லுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.