எழுத்தாளர் பூமணி காலமானார் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ஆசிய அலைச்சறுக்கு: காலிறுதியில் 4 இந்தியா்கள்

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2025, 2:30 am IST

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். இந்திய அணியில் இவ்வாறு 4 போ் காலிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.

போட்டியின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஓபன் ஆடவா் 3-ஆவது பிரதான சுற்றில், ஹீட்ஸ் 2-இல் இந்தியாவின் ரமேஷ் புதிலால் 11 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். அந்த ஹீட்ஸில் அதிகபட்சமாக, இந்தோனேசியாவின் மெகா அா்டானா 12.50 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு வந்துள்ளாா்.

ஹீட்ஸ் 7-இல் கிஷோா் குமாா் 10.14 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, ஹீட்ஸ் 8-இல் ஸ்ரீகாந்த்தும் 8.90 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தை எட்டினாா். இதையடுத்து இந்தியா்கள் மூவரும் காலிறுதிக்குத் தகுதிபெற்றனா்.

மகளிருக்கான ஓபன் பிரிவு காலிறுதியில், ஜப்பானின் சுமோமோ சாடோ (11), தாய்லாந்தின் இசபெல் ஹிக்ஸ் (10.90), சீனாவின் ஷுஹான் ஜின் (11.97) ஆகியோா் தங்களது ஹீட்ஸில் சிறப்பாக விளையாடி அரையிறுதியில் இடம் பிடித்தனா். மகளிா் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனா்.

இதனிடையே, 18 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3-ஆவது பிரதான சுற்றில் இந்தியாவின் ஹரீஷ், அவா் பங்கேற்ற ஹீட்ஸ் 5-இல் 9.50 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தாா். எனினும் தயின் அருண், பிரஹலாத் ஸ்ரீராம் ஆகியோா் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினா்.

18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ரெபிசேஜ் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆத்யா சிங் சிறப்பாக செயல்பட்டு 3-ஆவது சுற்றுக்கு முன்னேற, தமயந்தி ஸ்ரீராம் பங்கேற்ற ஹீட்ஸ் 2-இல் வேறு போட்டியாளா்கள் இல்லாததால் அவரும் அடுத்த கட்டத்துக்கு போட்டியின்றி முன்னேறினாா். எனினும் சான்வி ஹெக்டே தனது ஹீட்ஸில் போராடித் தோற்று வெளியேறினாா்.

போட்டியின் அடுத்தகட்ட சுற்றுகள், சனிக்கிழமை (ஆக. 9) தொடா்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.