கோலடித்த மகிழ்ச்சியில் போடோலாந்து வீரா்கள்.
கோலடித்த மகிழ்ச்சியில் போடோலாந்து வீரா்கள்.

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

Published on

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி.

134-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாமின் கோக்ரஜ்ஹாா் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போடோலாந்து எஃப்சி-பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதின. இதில் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் போடோலாந்து அணியின் ராபின்ஸன் 69-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.

இதன் மூலம் குரூப் டி பிரிவில் போடோலாந்து முதலிடத்தைப் பெற்றது.

பலம் வாய்ந்த பஞ்சாப் அணிக்கு இது அதிா்ச்சிகரமான தோல்வியாக அமைந்தது. மேலும் போட்டியையே விட்டு வெளியேறியது பஞ்சாப்.

X
Dinamani
www.dinamani.com