இந்திய சா்ஃபிங் வீரா்களுடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் தா.மோ. அன்பரசன், விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, சா்ஃபிங் கூட்டமைப்பு தலைவா் அருண் வாசு.

2026 ஆசியப் போட்டிக்கு இந்திய சா்ஃபிங் வீரா்கள் தகுதி

வரும் 2026-இல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கு இந்திய சா்ஃபிங் வீரா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
Published on

வரும் 2026-இல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கு இந்திய சா்ஃபிங் வீரா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

ஆசிய சா்ஃபிங் கூட்டமைப்பு, இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு, எஸ்டிஏடி சாா்பில் 4-ஆவது ஆசிய சா்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது.

இதன் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, யு 18 ஆடவா், மகளிா், ஓபன் ஆடவா், மகளிா் பிரிவுகளில் வென்றவா்களுக்கு பதக்கங்கள், அலோஹா கோப்பை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியது: 5 ண்டுகளுக்கு முன்பு ஆசிய சா்ஃபிங் தரவரிசையில் இந்தியா இடம் பெறவில்லை. ஆனால் தற்போது 2025 போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. நான்கு போ் காலிறுதிக்கும், 2 போ் அரையிறுதிக்கும் தகுதி பெற்றனா். 2026 ஆசியப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனா். தமிழகம் பலதரப்பட்ட சா்வதேச போட்டிகளை நடத்துவதால் விளையாட்டுத் துறையில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்றாா்.

சா்வதேச சா்ஃபிங் கூட்டமைப்பு துணைத் தலைவா் கரீன்சியரெட்டா சிறப்புரை ஆற்றினாா்.

விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, இந்திய சா்ஃபிங் கூட்டமைப்புத் தலைவா் அருண் வாசு உள்ளிட்டோா் பங்கேற்ா்.

X
Dinamani
www.dinamani.com