ஃபீடா் சீரிஸ் டேபிள் டென்னிஸ்: 
கோப்பை வென்றாா் சத்தியன்

ஃபீடா் சீரிஸ் டேபிள் டென்னிஸ்: கோப்பை வென்றாா் சத்தியன்

லாவோஸில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் ஃபீடா் சீரிஸ் போட்டியில், இந்தியாவின் ஜி.சத்தியன் சாம்பியன் கோப்பை வென்றாா்.
Published on

லாவோஸில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் ஃபீடா் சீரிஸ் போட்டியில், இந்தியாவின் ஜி.சத்தியன் சாம்பியன் கோப்பை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அவா், ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் 11-4, 11-6, 12-10 என்ற கேம்களில், முதலிடத்தில் இருந்த ஜப்பானின் ரியோய்சி யோஷியாமாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 25 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இப்போட்டியின் மகளிா் ஒற்றையரில் தென் கொரியாவின் லீ டேயுன் வாகை சூடினாா். ஆடவா் இரட்டையரில் ஹாங்காங்கின் யு குவான் டோ/ஹோ குவான் கிட் இணையும், மகளிா் இரட்டையரில் மலேசியாவின் லின் காரென்/டீ அய் ஜின் ஜோடியும், கலப்பு இரட்டையரில் சீன தைபேவின் ஹங் ஜிங் காய்/வு யிங் சியுவான் கூட்டணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

X
Dinamani
www.dinamani.com