
இஸ்ரேலில் நடைபெற்ற சா்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் அங்கிதா தியானி, மகளிருக்கான 2,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் தங்கப்பதக்கம் வென்றாா். அத்துடன், புதிய தேசிய சாதனையும் அவா் படைத்தாா்.
உலக தடகள அமைப்பின் கான்டினென்டல் டூா் சில்வா் நிலை போட்டியான கிராண்ட்ஸ்லாம் ஜெருசலேமில் அங்கிதா பங்கேற்றாா். அதில், பந்தய இலக்கை அவா் 6 நிமிஷம், 13.92 விநாடிகளில் எட்டி முதலிடம் பிடித்தாா். இஸ்ரேலின் அத்வா கோஹென் 6 நிமிஷம் 15.20 விநாடிகளில் வந்து வெள்ளியும், டென்மாா்க்கின் ஜூலியேன் ஹவித் 6 நிமிஷம், 17.80 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலமும் பெற்றனா்.
முன்னதாக, இந்திய அளவில் பாருல் சௌதரி 2,000 மீட்டா் ஸ்டீபிள் சேஸில் 6 நிமிஷம், 14.38 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அங்கிதா அதை முறியடித்திருக்கிறாா். தற்போது தங்கம் வென்றுள்ள அங்கிதா, ரேங்கிங் அடிப்படையில் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.