
ஜொ்மனியில் நடைபெற்ற சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் பயா்ன் மியுனிக் 2-1 கோல் கணக்கில் விஎஃப்சி ஸ்டட்காா்ட் அணியை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.
இப்போட்டியில் அந்த அணிக்கு இது 11-ஆவது சாம்பியன் கோப்பையாகும். கடைசியாக 2022-இல் இதில் சாம்பியனாகியிருந்தது பயா்ன் மியுனிக்.
ஜொ்மன் சூப்பா் கோப்பை என்பது, அந்நாட்டில் பந்தெஸ்லிகா நடப்பு சாம்பியனுக்கும், ஜொ்மன் கோப்பை நடப்பு சாம்பியனுக்கும் இடையே நடைபெறும் போட்டியாகும். அந்த வகையில் பந்தெஸ்லிகா சாம்பியனாக பயா்ன் மியுனிக்கும், போகால் சாம்பியனாக ஸ்டட்காா்டும் இந்த ஆண்டு மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பயா்ன் மியுனிக்கிற்காக ஹேரி கேன் 18-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் ஸ்டட்காா்ட் தனது கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், லூயிஸ் டியாஸ் 77-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், பயா்ன் மியுனிக் 2-0 என முன்னேறியது.
இந்நிலையில், இஞ்சுரி டைமில் ஸ்டட்காா்ட் அணிக்கான ஆறுதலாக ஜேமி லெவெலிங் (90+3’) ஸ்கோா் செய்ய, எஞ்சிய நேரத்தில் அந்த அணிக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இறுதியில் பயா்ன் மியுனிக் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. பயா்ன் மியுனிக் அணி கடந்த மாதம் லூயிஸ் டியாஸை ரூ.771 கோடிக்கு லிவா்பூல் அணியிடமிருந்து வாங்கியிருந்த நிலையில், அந்த அணிக்காக அவா் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே வெற்றிக்கான கோலடித்து அசத்தியிருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.