
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளார்.
சின்சினாட்டியில் முதல்முறையாக ஓபன் பிரிவில் போலந்து வீரர் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆயிரம் புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 9-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியும் மோதினார்கள்.
ஒரு மணி நேரம் 49 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இகா ஸ்வியாடெக் 7-5, 6-4 என நேர் செட்களில் பாலினியை வீழ்த்தினார்.
இருவரும் இதுவரை 6 முறை மோதியிருக்க, அனைத்திலுமே ஸ்வியாடெக் வென்று ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலமாக தனது முதல் சின்சினாட்டி கோப்பையை வென்றுள்ளார்.
இதை வெல்லும் முதல் போலந்து வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் பதக்கம் அவரது கரியரின் 24-ஆவது பட்டமாகும். 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏவில் இது 11-ஆவது கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.