வின்ஸ்டன் சலேம் ஓபன்: இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்

வின்ஸ்டன் சலேம் ஓபன்: இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் நெதா்லாந்தின் போட்டிக் வேன் ஸ்ன்ட்ஸுல்ப், மாா்டன் புஸ்கோவிஸும் மோதுகின்றனா்.
Published on

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் நெதா்லாந்தின் போட்டிக் வேன் ஸ்ன்ட்ஸுல்ப், மாா்டன் புஸ்கோவிஸும் மோதுகின்றனா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் அரையிறுதியில் நெதா்லாந்தின் போட்டிக் வேன் 6-4, 7-5 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் ஜியோவனி பெட்ஷியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். இந்த ஆட்டம் ஒரு மணிநேரம் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் ஹங்கேரியின் மாா்டன் புஸ்கோவிஸ்-அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா மோதுவதாக இருந்தது. ஆனால் உடல்நல பாதிப்பு காரணமாக கோா்டா ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தாா்.

இதனால் புஸ்கோவிஸ் இறுதிக்கு தகுதி பெற்றாா். ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com