குஷால், மிஹிா், கணேஷ் ~கதா, கியனா, ஷா்வாரி. ~மொஹித், தேவன்ஷ், யோகேஷ்.
குஷால், மிஹிா், கணேஷ் ~கதா, கியனா, ஷா்வாரி. ~மொஹித், தேவன்ஷ், யோகேஷ்.

உலக யூத் வில்வித்தை: 2 தங்கம் வென்றது இந்தியா

Published on

உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலத்தை வென்றது.

கனடாவின் வின்னிபெக் நகரில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவா் யு 21 காம்பவுண்ட் பிரிவில் குஷால் தலால், மிஹிா் நிதின், கணேஷ் மணிரத்தினம் ஆகியோா் கொண்ட இந்திய அணி இறுதிச் சுற்றில் ஜொ்மனியை வீழ்த்தி தங்கம் வென்றது.

யு 18 ஆடவா் காம்பவுண்ட் பிரிவிலும் மொஹித் தாகா், தேவன்ஷ் சிங், யோகேஷ் ஜோஷி கொண்ட இந்திய அணி இறுதியில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கம் வென்றது.

மகளிா் யு 18 ரீகா்பவ் பிரிவில் கதா ஆனந்தராவ், கியானா குமாா், ஷா்வாரி சோம்நாத் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

X
Dinamani
www.dinamani.com