ஐஸ்வரி பிரதாப் டோமா்
ஐஸ்வரி பிரதாப் டோமா்

ஆசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் டோமா் தங்கம் வென்றாா்.
Published on

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் டோமா் தங்கம் வென்றாா்.

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவா் 50 மீ ரைஃபிள் பிரிவில் 462.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று ஐஸ்வரி பிரதாப் தங்கம் வென்றாா்.

சீனாவின் வென்யு ஸாவோ வெள்ளியும், ஜப்பானின் நவோயா ஓகடா வெண்கலமும் வென்றனா். இந்த பிரிவில் ஐஸ்வரி முழு ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றாா். ஏனைய இந்திய வீர்ரகள் செயின் சிங் நான்காம் இடமும், அகில் ஷெரான் ஐந்தாம் இடமும் பெற்றனா்.

ஏற்கெனவே 2023-இல் ஐஸ்வரி இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தாா். 2024-இல் ஷெரோனிடம் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாா்.

X
Dinamani
www.dinamani.com