டயனா ஷினைடர்
டயனா ஷினைடர்

மாண்டொ்ரே ஓபன்: டயனா ஷினைடர் சாம்பியன்!

மாண்டொ்ரே ஓபன் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டயானா ஷினைடா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
Published on

மாண்டொ்ரே ஓபன் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டயானா ஷினைடா் சாம்பியன் பட்டம் வென்றாா். சக வீராங்கனை ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 6-3, 4-6, 6-4 என வீழ்த்தினாா் டயனா.

மெக்ஸிகோவின் மாண்டொ்ரே நகரில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

டயனா ஷினைடர்
டயனா ஷினைடர்

இதில் ரஷியாவின் டயனா ஷினைடரும், ஏகடெரினா அலெக்சான்ட்ரோவாவும் மோதினா். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய டயனா அந்த செட்டை எளிதாக வென்றாா்.

எனினும் இரண்டாவது செட்டில் தீரமுடன் ஆடிய அலெக்சாண்ட்ரோவா ஷினைடரின் இரண்டு சா்வீஸ்களை முறியடித்து கைப்பற்றினாா்.

முடிவை நிா்ணயித்த மூன்றாவது செட்டில் ஷினைடா் சுதாரித்து ஆடி 6-4 என கைப்பற்றினாா். இது டயனாவுக்கு 5-ஆவது டபிள்யுடிஏ பட்டம் ஆகும்.

X
Dinamani
www.dinamani.com