வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.
செய்திகள்
யு 17 கால்பந்து: இந்தியா அபார வெற்றி
யு 17 தெற்காசிய மகளிா் கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடா் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
யு 17 தெற்காசிய மகளிா் கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடா் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பூடான் தலைநகா் திம்புவில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி ஏற்கெனவே வங்கதேசம், இலங்கையை வீழ்த்தியது. இந்நிலையில் போட்டியை நடத்தும் பூடான் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி மோதியது. இதில் 8-0 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தியது.
இந்திய தரப்பில் குமாரி 53, 61, 73, அப்ஹிஸ்தா பஸ்நெட் 23, 89, பியா்ல் 71, திவ்யானி 77, வலைனா 90பிளஸ் நிமிஷங்களில் கோலடித்தனா்.
3 ஆட்டங்களில் மொத்தம் 17 கோல்களை இந்தியா போட்டுள்ளது. 9 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நேபாளம், வங்கதேசம் 3 புள்ளிகளுடன் உள்ளன. இந்தியாவுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.