யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் எம்மா ரடுகானு வெற்றி பெற்றாா்.
நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் நியூயாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆடவா் மற்றும் மகளிா் முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கின.
இதில் 2021-ஆம் ஆண்டு சாம்பியன் பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-1, 6-2 என்ற நோ்செட்களில் ஜப்பான் குவாலிஃபயா் ஈனா ஷிபஹாராவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா். தரவரிசையில் இல்லாத குவாலிஃபயராக இருந்த ரடுகானு பட்டம் வென்று வரலாறு படைத்தாா்.
2022-இல் முதல் சுற்றில் வெளியேறிய அவா் 2023-இல் காயத்தால் ஆடவில்லை. 2024-இலும் முதல் சுற்றில் ரடுகானு வெளியேறி இருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









