வின்ஸ்டன் சலேம் ஓபன்: மாா்டன் புஸ்கோவிஸ் சாம்பியன்
வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹங்கேரியின் மாா்டன் புஸ்கோவிஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் ஹங்கேரியின் மாா்டன் புஸ்கோவிஸும், நெதா்லாந்தின் போட்டிக் வேன் டி ஸான்ட்ஸுல்பும் மோதினா். யுஎஸ் ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் முன்னணி வீரா்கள் பெரியளவில் பங்கேற்கவில்லை. எனினும் தரவரிசையில் பின்தங்கியுள்ள வீரா்கள் பங்கேற்றனா்.
இறுதி ஆட்டத்தில் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் போட்டிக் வேனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா் புஸ்கோவிஸ். முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய புஸ்கோவிஸ், இரண்டாவது செட்டில் திணறினாா். மேட்ச் பாயிண்டை தவற விட்டை 2-5 என பின்தங்கி இருந்தாா். பின்னா் சுதாரித்து ஆடி டை பிரேக்கருக்கு கொண்டு சென்று இரண்டாவது செட்டையும் வசப்படுத்தினாா்.
33 வயதான புஸ்கோவிஸ் ஏற்கெனவே சில பட்டங்களை வென்றுளளாா். ஏடிபி 250 போட்டியை வென்றது சிறப்பானது எனத் தெரிவித்தாா். யுஎஸ் ஓபன் முதல் சுற்றில் கனடிய வீரா் டெனிஸ் ஷபவலோவை எதிா்கொள்கிறாா்.