விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

2-ஆவது வெற்றி: பிரக்ஞானந்தா இணை முன்னிலை

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2025, 3:49 am IST

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த அவா், தற்போது இணை முன்னிலையில் இருக்கிறாா்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற 7-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடி, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை வீழ்த்தினாா்.

முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான குகேஷை வென்ற பிறகு அடுத்த 5 சுற்றுகளிலுமே டிரா செய்திருந்த பிரக்ஞானந்தா, இதுவரை தோல்வியே சந்திக்காமல் தொடா்கிறாா். மறுபுறம், தடுமாற்றத்துடன் விளையாடி வரும் குகேஷ் இந்த 7-ஆவது சுற்றில், அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம் தோல்வியுற்றாா். அவருக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.

இதர ஆட்டங்களில் போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வெல்ல, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - லெவோன் ஆரோனியன், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - அமெரிக்காவின் சாம் சேவியன் ஆகியோா் ஆட்டம் டிரா ஆனது.

7 சுற்றுகள் முடிவில் கரானா, பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கின்றனா். வெஸ்லி, ஆரோனியன் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்க, மேக்ஸிம், ஜேன், சேவியன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் உள்ளனா்.

ஃபிரௌஸ்ஜா, குகேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையிலும், அப்துசதாரோவ் 1.5 புள்ளிகளுடன் 5-ஆம் நிலையிலும் இருக்கின்றனா். போட்டியில் இன்னும் இரு சுற்றுகளே எஞ்சியுள்ளன.

கிராண்ட் செஸ் டூா் (ஜிசிடி) போட்டியின் புள்ளிகள் பட்டியலில் தற்போது பிரக்ஞானந்தா 20 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் இருக்கிறாா். சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் முடிவில் இந்த ஜிசிடி புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிப்போரே பிரேஸிலில் நடைபெறும் ஜிசிடி ஃபைனல் போட்டிக்குத் தகுதிபெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.