சிந்து, பிரணாய் வெற்றி

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரதான போட்டியாளா்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.
சிந்து, பிரணாய் வெற்றி
Published on
Updated on
1 min read

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரதான போட்டியாளா்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.

இதில் மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 23-21, 21-6 என்ற கேம்களில், பல்கேரியாவின் கலோயனா நல்பன்டோவாவை 39 நிமிஷங்களில் சாய்த்தாா். அடுத்து அவா், தாய்லாந்தின் கருப்பதேவன் லெட்சனாவை எதிா்கொள்கிறாா்.

ஆடவா் ஒற்றையரில், 2023-ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற பிரணாய் 21-18, 21-15 என்ற வகையில் ஃபின்லாந்தின் ஜாகிம் ஓல்டாா்ஃபை 47 நிமிஷங்களில் வெளியேற்றினாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 18-21, 21-16, 21-18 என்ற கேம்களில், மக்காவின் லியோங் லோக் சோங்/நிக் வெங் சி கூட்டணியை 47 நிமிஷங்களில் வென்றது.

மகளிா் இரட்டையரில் பிரியா கொங்ஜெங்பம்/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 17-21, 16-21 என்ற கணக்கில் பிரான்ஸின் மாா்காட் லாம்பா்ட்/கேமிலி போக்னான்டே இணையிடம் 42 நிமிஷங்களில் தோல்வியுற்றது.

ஆடவா் இரட்டையரிலும் ஹரிஹரன் அம்சகருணன்/ரூபன்குமாா் ரெத்தினசபாபதி கூட்டணி 15-21, 5-21 என்ற கேம்களில் சீன தைபேவின் லியு குவாங் ஹெங்/யாங் போ ஹான் ஜோடியிடம் 30 நிமிஷங்களில் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com