கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.
கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி
Published on
Updated on
1 min read

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு 3 போ் தகுதிபெறும் வாய்ப்பை வழங்கும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.17 கோடியாகும்.

90-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 206 போ் களம் காணும் இந்தப் போட்டியில் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா உள்பட 21 இந்தியா்கள் பங்கேற்கின்றனா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா உள்பட பல பிரபல போட்டியாளா்களும் மோதவுள்ளனா்.

5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஃபிடே தரவரிசை அடிப்படையில் இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா் என்றாலும், அவா் விளையாடுவது இதுவரை உறுதியாகவில்லை.

போட்டித்தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பெறுவோா், நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் காண்பா். 2 கேம் நாக்அவுட் முறையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை செஸ் போட்டி இந்தியாவில் கடைசியாக 2002-இல் ஹைதராபாதில் நடைபெற்றபோது, விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் ஆனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com