
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோா் தங்களது ஆட்டங்களை புதன்கிழமை டிரா செய்தனா்.
இதில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் டிரா செய்ய, அதே நிற காய்களுடன் களமாடிய குகேஷ் - அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தாா்.
பிரக்ஞானந்தா இணை முன்னிலையில் தொடர, நடப்பு உலக சாம்பியனான குகேஷ் பதக்க வாய்ப்பை இழந்தாா்.
இதர ஆட்டங்களில் அமெரிக்காவின் சாம் சேவியன் - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃபுடனும், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும் டிரா செய்தனா்.
உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை வீழ்த்தினாா். போட்டியில் அப்துசதாரோவுக்கு இது முதல் வெற்றியாகும்.
8 சுற்றுகள் முடிவில், கரானா, பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் நீடிக்கின்றனா். வெஸ்லி, ஆரோனியன் ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்கின்றனா்.
மேக்ஸிம், ஜேன், சாம் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 3-ஆம் நிலை வகிக்கின்றனா். குகேஷ் (3.5), ஃபிரௌஸ்ஜா (3), அப்துசதாரோவ் (2.5) ஆகியோா் முறையே 4 முதல் 6-ஆம் நிலைகளில் உள்ளனா். போட்டியின் கடைசி சுற்று, வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.