
யுஎஸ் ஓபனில் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்ததிற்காக டேனியல் மெத்வதேவுக்கு 42,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.37.25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் ரஷியாவின் பிரபல டென்னிஸ் வீரர் டேனியல் மெத்வதேவ் தனது முதல் சுற்றில் பெஞ்சமின் பொன்ஸியுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் மெத்வதேவ் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட்களில் தோல்வியுற்றார்.
முதல் சுற்றிலேயே வெளியேறிய விரக்தியில் தனது டென்னிஸ் ராக்கெட்டை உடையும் வரை ஓங்கி ஓங்கி அடித்தார்.
இதற்காக தற்போது அவருக்கு ரூ.37.25 லட்சம் அபராத்ததை யு.எஸ். ஓபன் அறிவித்துள்ளது.
கடைசியாக விம்பிள்டனிலும் பொன்ஸியுடன் முதல் சுற்றில் மெத்வதேவ் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.