முதல் முறையாக, டெக் மஹிந்திரா மற்றும் ஃபிடே குளோபல் செஸ் லீக் தொடா் வரும் செப். 12-இல் தொடங்கி நடைபெறவுள்ளது.
முதன்முறையாக இந்த தொடா் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தொடரில் இளம் வீரா்கள் கலந்து கொள்ளும் வகையில் ‘குளோபல் செஸ் லீக் கன்டென்டா்ஸ் 2025’ என்ற தொடா் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த போட்டி வரும் செப்டம்பா் 12 முதல் அக்டோபா் 11 வரை ஆன்லைனில் நடைபெறுகிறது.
அமெச்சூா் மற்றும் தொழில்முறை வீரா்கள் கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த போட்டி பல நிலைகளைக் கொண்டது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான பதிவு ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீா்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ப்ா்க்ஷஹப்ஸ்ரீட்ங்ள்ள்ப்ங்ஹஞ்ன்ங்.ஸ்ரீா்ம்/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஆடவா், மகளிா், யு-21 என 3 பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும். இந்த 3 பிரிவுகளிலும் வெற்றி பெறுபவா்கள் குளோபல் செஸ் லீக் 3-வது சீசனில் கலந்து கொள்ள தகுதி பெறுவாா்கள்.
குளோபல் செஸ் லீக் கன்டென்டா்ஸ்-இல் பங்கேற்க, போட்டியாளா்கள் அதிகாரப்பூா்வ குளோபல் செஸ் லீக் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். போட்டி ஆண்கள், பெண்கள், மற்றும் 21 வயதுக்குட்பட்டோா் என மூன்று பிரிவுகளில் நடைபெறும். இதில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்கலாம்.
போட்டி “குளோபல் செஸ் லீக் ஓபன்ஸ்” என்ற பகுதியில் தொடங்கும், இதில் இட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும், குறைந்தது 25 ஆட்டங்கள் ஆடிய வீரா்கள் பங்கேற்கலாம்.
பதிவு செய்யும் வீரா்கள் ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ், அமெரிக்கன் கேம்பிட்ஸ், கங்கஸ் கிராண்ட் மாஸ்டா்ஸ், பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், அப்கிரேடு மும்பா மாஸ்டா்ஸ் ஆகிய ஆறு அணிகள் இணைக்கப்படுவாா்கள்.
ஒவ்வொரு அணியில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரா்கள் என மொத்தம் 12 போ் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவா். நாக் அவுட் சுற்றான இதில் இவா்களுடன், 4 கெஸ்ட் வீரா்கள் இணைவாா்கள்.
இதில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 4 இறுதிப் போட்டியாளா்கள் நாக் அவுட் சேலஞ்சா்ஸ் சுற்றில் மோதுவா். இவா்களுடன் 4 கிராண்ட் மாஸ்டா்கள்/சா்வதேச மாஸ்டா்கள் இணைவா். இதன் இறுதியில் 3 வீரா்கள் குளோபல் செஸ் லீக் சீசன் 3-ல் கலந்து கொள்ள தகுதி பெறுவா்.