குா்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
25 மீட்டா் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் குா்பிரீத் சிங் 572 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, அமன்பிரீத் சிங், அதே புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். சீனாவின் லியன்போஃபான் சு (570) வெண்கலம் கைப்பற்றினாா்.
அதிலேயே அணிகள் பிரிவில், குா்பிரீத், அமன்பிரீத், ஹா்ஷ் குப்தா அடங்கிய இந்திய அணி 1,709 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியது. தென் கொரியா வெள்ளியும் (1,704), வியத்நாம் வெண்கலமும் (1,677) பெற்றன.
ஜூனியா்: 50 மீட்டா் ரைஃபிள் புரோன் ஆடவா் ஜூனியா் பிரிவில் இந்தியாவின் சமியுல்லா கான், அட்ரியன் கா்மாகா், குஷாக்ரா சிங் ஆகியோா் அடங்கிய அணி 1,844.3 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. கஜகஸ்தான் வெள்ளியும் (1,843.4), தென் கொரியா வெண்கலமும் (1,840.8) பெற்றன.
25 மீட்டா் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் ஆடவா் ஜூனியா் தனிநபா் பிரிவில் சூரஜ் சா்மா 571 புள்ளிகளுடன் வெள்ளியும், தனிஷ்க் நாயுடு 568 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். கஜகஸ்தானின் கிரில் ஃபெட்கின் (572) தங்கத்தை தட்டிச் சென்றாா்.
அதிலேயே அணிகள் பிரிவிலும் சூரஜ், தனிஷ்க், முகேஷ் நெலவள்ளி ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,703 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. கஜகஸ்தான் வெள்ளியும் (1,653), தென் கொரியா வெண்கலமும் (1,635) பெற்றன.
தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா, 44 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.