
லியோனல் மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் கடைசியாக ஆர்ஜென்டீனாவின் தேசிய உடை அணிந்து விளையாடவிருக்கிறார்.
மெஸ்ஸியின் கடைசி போட்டி என்பதால் இதற்காக டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
சொந்த மண்ணில் கடைசி போட்டி?
உலகக் கோப்பைக்கான கடைசி தகுதிச் சுற்றுப் போட்டி வெனிசுலாவுடன் அடுத்த வாரம் (செப்.9) நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்குமென கருதப்படுகிறது.
38 வயதாகும் மெஸ்ஸி அடுத்தாண்டு (2026) உலகக் கோப்பையில் விளையாடுவார். அடுத்த உலகக் கோப்பை 2030-இல் அவருக்கு 40 வயதாகியிருக்கும் என்பதால் அதுவரை விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இன்டர் மியாமி அணியில் விளையாடும் மெஸ்ஸி லீக் கோப்பையின் அரையிறுதியில் 2 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில், மெஸ்ஸி பேசியதாவது:
கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடுவது மிகவும் சிறப்பானது. அந்தப் போட்டிக்குப் பிறகு நட்பு ரீதியான போட்டி இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், அது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
அதனால், அந்தப் போட்டியைக் காண எனது குடும்பம்: மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் என அனைவரும் வருகிறார்கள்.
அடுத்து என்னவாகும் எனத் தெரியாது. அதனால், நாங்கள் அந்தக் கணத்தை முக்கியமாக கருதுகிறோம் என்றார்.
மெஸ்ஸியின் புகைப்படத்தைப் பகிர்ந்த தென் அமெரிக்க கால்பந்து அமைப்பு, “கடைசி போட்டி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் 100 டாலர், அதிகபட்சமாக 500 டாலர் வரை இருக்குமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.