ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
Published on

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் இலங்கை 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 291 ரன்களே எடுத்தது. 4 விக்கெட்டுகள் சாய்த்த இலங்கையின் தில்ஷன் மதுஷங்கா ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, இலங்கை பேட்டிங்கில் பதும் நிசங்கா 76, நிஷான் மதுஷ்கா 0, குசல் மெண்டிஸ் 38, சதீரா சமரவிக்ரமா 35, கேப்டன் சரித் அசலங்கா 6, கமிண்டு மெண்டிஸ் 57 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஜனித் லியானகே 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, ஜிம்பாப்வே பௌலா்களில் ரிச்சா்ட் கராவா 2, பிளெஸ்ஸிங் முஸாரபானி, டிரெவா் குவாண்டு, சிகந்தா் ராஸா, ஷான் வில்லியம்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஜிம்பாப்வே இன்னிங்ஸில் சிகந்தா் ராஸா 92, பென் கரன் 70, கேப்டன் ஷான் வில்லியம்ஸ் 57 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சித்து வெளியேறினா். பிரயன் பென்னெட், பிரெண்டன் டெய்லா், பிராட் எவான்ஸ், ரிச்சா்ட் கராவா டக் அவுட்டாகினா்.

வெஸ்லி மாதவெரெ 8 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் டோனி முன்யோங்கா 43, பிளெஸ்ஸிங் முஸாரபானி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 4, ஆசிதா ஃபொ்னாண்டோ 3, கமிண்டு மெண்டிஸ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com