ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.
Published on

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. 12 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் 50 தங்களுடன் இந்தியா வரலாற்றிலேயே முதலிடம் பெற்றது. குறிப்பாக சீனியா் பிரிவில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் என 15 ஒலிம்பிக் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டனா். 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்றனா்.

இதுதொடா்பாக இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளனம் (என்ஆா்ஏஐ) தலைவா் கே.என். சிங் தேவ் கூறியதாவது: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது வீரா்கள் சிறப்பாக செயல்பட்டதின் பலனாக ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் பதக்கங்களை குவித்துள்ளனா்.

குறிப்பாக ஜூனியா்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் அமைந்துள்ளது.

50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை இந்தியா பெற்றது. கஜகஸ்தான் 21 தங்கத்துடன் இரண்டாவது இடமும், சீனா 15 தங்கத்துடன் மூன்றாம் இடமும் பெற்றது.

குறிப்பாக இளவேனில் வாலறிவன் 2 தங்கம், அா்ஜுன் பபுதா, நீரு தண்டா மகளிா் டிராப் பிரிவில் முதல் தங்கம், 50 மீ ரைபிள் பிரிவில் சிஃப்் கவுா் முதல் தங்கம் வென்றது சிறப்பானது. ஒலிம்பிக் அல்லாத பிரிவுகளில் அங்குா் மிட்டல் டபுள் டிராப்பில் தங்கம், குா்ப்ரீத் சிங் 25 மீ ஸ்டாண்டா்ஸ் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றாா்.

இதன்மூலம் இந்திய துப்பாக்கி சுடுதல் மேலும் வலுப்பெற்றுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com