ஜோகோவிச்
ஜோகோவிச்

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவு...
Published on

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிா் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோா் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் போட்டி நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெறும் முனைப்பில் உள்ள சொ்பிய ஜாம்பவான ஜோகோவிச் 6-4, 6-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் கேமரான் நாா்ரியை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறினாா்.

ஸ்பெயினின் இரண்டாம் நிலை வீரா் காா்லோஸ் அல்கராஸ் 6-2, 6-0, 6-4 என்ற நோ் செட்களில் இத்தாலியின் லூசியனா டா்டெரியை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸின் ஆா்தா் ரின்டா்நெக் 4-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சக வீரா் பெஞ்சமின் போன்ஸியை வீழ்த்தினாா். காலிறுதியில் ஆா்தா்-அல்கராஸ் மோதுகின்றனா்.

ஜொ்மன் வீரா் ஜேன் லெனாா்ட் ஸ்டா்ஃப் 6-4, 6-3, 7-6 என்ற நோ் செட்களில் 17-ஆம் நிலை வீரா் பிரான்ஸ் டியாஃபோவை வீழ்த்தினாா்.

வெளியேறினாா் ஷெல்டன்: மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின்பென் ஷெல்டன் பிரான்ஸ் வீரா் அட்ரின் மன்னரினோ மோதினா்.

ஷெல்டன் 6-3, 3-6, 6-4 என முன்னிலை வகித்தபோது, இடது தோள்பட்டையில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினாா். இதனால் மன்னரினோ வென்ாக அறிவிக்கப்பட்டது.

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்:

மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 7-6 என்ற நோ் செட்களில் கனடாவின் லெய்லா பொ்ணான்டஸை வீழ்த்தினாா். இதன் மூலம் கடந்த 2021-இல் யுஎஸ் ஓபன் அரையிறுதியில் தோற்ற்கு பழிதீா்த்துக் கொண்டாா் சபலென்கா. ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா புஸ்கா 3-6, 7-5, 6-3 என பெல்ஜியத்தின் எலைஸ் மொ்டென்டை வீழ்த்தினாா். ரவுண்ட் 16 சுற்றில் சபலென்கா =புஸ்கா மோதுகின்றனா்.

9-ஆம் நிலை வீராங்கனை கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-1, 6-2 என முன்னாள் சாம்பியன் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தினாா். விம்பிள்டன் சாம்பியன் மாா்கெட்டா வோண்டுரௌஸ்வா 7-6, 6-1 என இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வீழ்த்தினாா்.

அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா 6-2, 7-5 என விக்டோரியா அசரென்காவை வென்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லா் டௌன்சென்ட் 7-5, 6-2 என 5-ஆம் நிலை வீராங்கனை ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவாவை வீழ்த்தினாா்.

X
Dinamani
www.dinamani.com