ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் பலி! ரூ.25 லட்சம் நிதியுதவி!

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆர்சிபி கேர்ஸ் ரூ.25 லட்சம் நிதியுதவி
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் பலி! ரூ.25 லட்சம் நிதியுதவி!
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆர்சிபி கேர்ஸ் நிதியுதவி அறிவித்துள்ளது.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஆர்சிபி கேர்ஸ் (RCB Cares) அறிவித்துள்ளது. முன்னதாக, ஆர்சிபி நிர்வாகம் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்திருந்தது.

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் பேரணி நடத்தினர்.

மாநில அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த துயரமான சம்பவத்தையடுத்து, கர்நாடக அரசு மற்றும் அம்மாநில காவல்துறை மீது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!

Summary

RCB announce Rs 25 lakh each for families who lost members in Bengaluru stampede

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com